டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இன்று சச்சின் மற்றும் பிசிசிஐ பாராட்டு விழா.
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, இன்று சச்சின் மற்றும் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
19 வயதுக்குட்பட்ட அறிமுக மகளிர் டி-20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி மகத்தான சாதனை படைத்திருக்கிறது. இதனை முன்னிட்டு சச்சின் மற்றும் பிசிசிஐ தரப்பில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாராட்டுவிழா நடைபெறுகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இதனை தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய் ஷா கூறியதாவது, இளம் வீராங்கனைகள் இந்தியாவை பெருமை அடைய வைத்துள்ளனர். அவர்களின் சாதனைகளை நாங்கள் கவுரவிப்போம் என்று ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். ஐசிசி மகளிர் U-19 முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் ஐசிசி உலகக்கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ அலுவலகப் பணியாளர்கள் இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு வழங்குவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். மாலை 6:30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
It is with great delight I share that Bharat Ratna Shri @sachin_rt and @BCCI Office Bearers will felicitate the victorious India U19 team on Feb 1st in Narendra Modi Stadium at 6:30 PM IST. The young cricketers have made India proud and we will honour their achievements.
— Jay Shah (@JayShah) January 30, 2023