யோவ் அது இம்ரான் கான் இல்ல…எங்கள் இமயம்..! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார் அது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பாக். பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை வெளியிட்ட இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி பதிவிடுகிறார்.அதில் இம்ரான் கான் 1969 என்றும் ப்திவிட்டுள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்கள் இம்ரான் கானுக்கும் -சச்சினுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல..இன்னும் சிலர் அவர் உங்கள் இம்ரான் கான் இல்லை எங்கள் கிரிக்கெட் இமயம் சச்சின் என்று பதிவிட்டும் சிலர் கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.