SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.

SA vs IND, 4th T20

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

முன்னதாக நடைபெற்ற டி20 தொடர்களில் இந்திய அணி எளிதில் அந்த தொடரை கைப்பற்றியது. ஆனால், தற்போது தென்னாப்பிரிக்க உடனான இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு சவாலாகவே இருந்துள்ளது. அதன்படி, நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியை, தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது.

அதே போல கடந்த 3-வது போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றியின் முனைப்பு சென்று தோல்வியடைந்திருக்கும். இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணியில் பலமாக இருப்பது அந்த அணியின் பேட்டிங் வரிசை தான். இதனால், அந்த அணியில் பந்து வீச்சில் ஓரிரு மாற்றம் செய்தால் இந்திய அணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

இந்திய அணியில் மாற்றம் என்ன?

கடந்த போட்டியில் இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக ரமன்தீப் சிங் சேர்க்கப்பட்டார். அதற்கு பலனளிக்கும் விதமாக அவர் பேட்டிங்கில் ஒரு சிறிய கேமியோ செய்தார். இதனால், இன்றய போட்டியில் பவுலிங் தரப்பில் ஏதேனும் மாற்றம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, மீண்டும் ஆவேஷ் கான் அணியில் இணையலாம் என இந்திய அணி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குவதால் கண்டிப்பாக பொறுப்புடன் அணியை தீர்மானிப்பார்கள் என கருதப்படுகிறது.

இந்திய அணியின் ஸ்பின் பலம் இந்த தொடரில் இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலாக இருந்திருக்கிறது. அதிலும், வருண் சக்கரவர்த்தியின் சூழல், தென்னாபிரிக்க அணிக்கு ஒரு தலைவலியாகவே இருந்துள்ளது. இன்றைய போட்டியிலும் இது தொடர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடைசி போட்டி

இன்று நடைபெறவுள்ள இந்த போட்டி இந்த் டி20 தொடரின் கடைசி போட்டியாகும். முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளனர். இதனால், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும்.

ஒருவேளை மாறாக இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது மழை போன்ற காரணங்களால் போட்டி நடைபெறாமல் போனாலோ இந்திய அணி இந்த டி20 தொடரை கைப்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்