SA vs IND : இந்தியா – தென்னாபிரிக்கா இடையே இன்று தொடங்கும் டி20 தொடர்! எந்த சேனலில் பார்க்கலாம்?
இந்தியா - தென்னாபிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது இன்று டர்பனில் தொடங்கவுள்ளது.

டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளனர். இந்த தொடரில் முதல் போட்டியானது இன்று இரவு 8.30 மணிக்கு டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் நடைபெற இருக்கிறது.
நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியைப் பெறுமா? இந்த தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சூரியகுமார் தலைமையில் இந்திய அணி இதுவரை 13 டி20 தொடர்கள் விளையாடி இருக்கிறது.
அதில், 11 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இதனால், சூரியகுமாரின் கேப்டன்ஷிப் இந்த தொடரிலும் வெற்றி வாகை சூடும் என ரசிகர்களால் கருதப்படுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்த முதல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள், யாரையெல்லாம் சூரியகுமார் தேர்வு செய்யவுள்ளார் என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
மேலும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸ்திரேலியா தொடருக்கான முன்னேற்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய அணியை வழி நடத்தவுள்ளார் இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த தொடருக்கு உருவாகி உள்ளது.
போட்டிகளை எங்கு பார்க்கலாம்?
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இந்த டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்க முடியும். அதே நேரம், ஓடிடியை பொறுத்தவரையில் ஜியோ சினிமாஸ் செயலியில் நேரலையில் பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
February 24, 2025
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025