SA vs IND : அதிரடி காட்டிய ‘ஜான்சன்’! இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை!
நேற்று நடந்த டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரான மார்கோ ஜான்சன் 16 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் அதாவது தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது தொடக்கத்தில் இந்திய அணியின் பக்கமே போட்டியானது இருந்தது.
ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய மார்கோ ஜான்சன் இந்திய அணியின் பவுலர்களை திணறடித்தார். இனி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என எதிர்பார்த்த போது, ஜான்சன் மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரிகள் விளாசி தென்னாப்பிரிக்க அணிக்கும் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு என்பதை காட்டினார்.
அவர் வெறும் 16 பந்துகள் பிடித்து 53 ரன்கள் அதாவது அரை சதம் அடித்தார். அவரது விளையாட்டால் இந்திய அணி வீரர்களுக்கு தோல்வி பயத்தையும் காட்டினார். ஆனால், அதன் பிறகு துரதிஷ்டவசமாக அவுட்டாகி வெளியேறினார். இப்படி குறைவான பந்தில் அரை சதம் அடித்ததால் அவர் தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அது என்னவென்றால், இந்திய அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்தில் அதிவேக அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த பட்டியலில் அடுத்தபடியாக கமரூன் க்ரீன் (19 பந்துகள்) உள்ளார். இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு சாதனை நிகழ்த்தியதால் உலக கிரிக்கெட் அரங்கில் அவரது பெயர் உற்று நோக்கும் வண்ணம் மாறியுள்ளது.