இந்திய அணியில் இடம்பெறாத ருதுராஜ்..! பிசிசிஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் ..!
பிசிசிஐ : வரும் ஜூலை-27ம் தேதி அன்று தொடங்கவிருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயணத்தில் இந்திய அணி மொத்தம் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்ததது.
இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வாகப்பட்டுள்ளனர். அதே போல 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வாகப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணத்தில் நன்றாகவே விளையாடி இருந்தார். ஆனால், அந்த தொடரிலும் கடைசி 2 போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், அவரது ரசிகர்களும், குறிப்பாக நெட்டிசன்கள் பிசிசிஐ-யை எக்ஸ் தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணிக்காக மட்டும் கடைசி 7 டி20 சர்வேதச போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் மொத்தமாக 356 ரன்கள் எடுத்துள்ளார், அதிலும் 71.2 சராசரியில், 158.7 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார்.
அதில் 1 சதம், மற்றும் 2 அரை சதங்களும் அடங்கும். இது போல ரசிகர்கள் அவரது சமீபத்திய ரெக்கார்டுகளை பதிவிட்டு, ‘ஏன் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை?’ என பிசிசிஐ-யிடம் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், ஒரு சிலர் இதே போல அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டால் ருதுராஜ் கெய்க்வாட்டின் கிரிக்கெட் வாழ்க்கை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பியதோடு, இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியையும் விமர்சித்து வருகின்றனர்.
இலங்கையுடனான 50 ஓவர் தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி , கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், மகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இலங்கையுடனான டி20 தொடருக்கான இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.