தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.!

IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளத. அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.
இது வரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த 2020, ஆண்டில் கூட ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த தொடரில் விளையாடிய சென்னை அணி மிகவும் மோசமாக செயலப்பட்டது. அதன் பிறகு தொடரின் இரண்டாம் பாதியில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமனம் செய்யப்பட்டார்.
Read More :- அப்போ பிரச்சனை முடிஞ்சிதா ? ரோஹித்தை கட்டி அணைத்த பாண்டியா .. வீடியோ வெளியிட்ட மும்பை அணி ..!
அதன் பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் வரையில் சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது ருதுராஜ் சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. MS தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா என்ற வருத்தமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ருதுராஜ் தலைமை தாங்கி நடத்தி சென்று இந்திய அணியை தங்க பதக்கம் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025