ருதுராஜ்-க்கு 3ஆவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்- ஜாபர்
இந்தியா-இலங்கை மோதும் 3-வது டி-20 போட்டியில் கில்லுக்கு பதிலாக ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி-20யில் இந்தியாவும், இரண்டாவது டி-20யில் இலங்கை அணியும் வென்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இன்று நடைபெறும் 3-வது போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், தெரிவித்துள்ளார். ருதுராஜ், உள்நாட்டு தொடர்களில் நிறைய ரன் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார்.
விஜய் ஹசாரே டிராபியில் ருதுராஜ், சிறப்பாக விளையாடினார். மறுபுறம் இந்திய அணியின் தொடக்கவீரராக களமிறங்கும் ஷுப்மன் கில் ஏமாற்றமளித்து வருகிறார். கிடைத்த வாய்ப்பை கில், பயன்படுத்த தவறிவிட்டார், முதல் இரண்டு டி-20 போட்டிகளில் முறையே கில் 7 மற்றும் 5 ரன்கள் எடுத்துள்ளார் என ஜாஃபர் கூறியுள்ளார்.