ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் சென்னை அணியில் தோனி கேப்டனாக செயல்படுவார் என தலைமை பயிற்சியாளர் ப்ளெமிங்க் அறிவித்துள்ளார்.

ms dhoni ruturaj

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் “தல” என்று அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, மீண்டும் CSK அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் அறிவித்துள்ளார்.

ருதுராஜ் விலகல்

ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டு அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால், சமீபத்திய போட்டியில் ஏற்பட்ட காயம் அவரை முழு சீசனிலிருந்தும் விலக வைத்துள்ளது. CSK அணி ஏற்கனவே மோசமான தொடக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் (5 போட்டிகளில் 4 தோல்வி), ருதுராஜின் விலகல் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவ அறிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

மீண்டும் கேப்டனாக தோனி 

அவர் விலகியுள்ள நிலையில், மீதமிருக்கும் போட்டியை அனுபவம் வாய்ந்த தோனி வழிநடத்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழும் அவர் CSK அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன் பட்டம் வெல்ல வைத்துள்ளார். கடந்த சீசனில் தலைமைப் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்த பிறகு, தோனி அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வந்தார்.

ஆனால், தற்போதைய சூழலில் அணியை மீட்டெடுக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தோனி பழையபடி கேப்டனாக விளையாடவுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் இதுகுறித்து கூறுகையில், “ருதுராஜின் காயம் எங்களுக்கு பெரிய இழப்பு. ஆனால், தோனி போன்ற ஒரு அனுபவமிக்க தலைவர் எங்களிடம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவர் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வருவார் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்