ஃபீல்டிங்கில் சொதப்பல்.. ருதுராஜ் விளக்கம்.! ப்ளே-ஆஃப் செல்லுமா சென்னை?

Ruturaj Gaikwad

IPL2024: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யவில்லை.

நேற்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும்  மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் சென்னை அணி குஜராத்திடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

நேற்றைய போட்டி முடிந்ததும் தோல்வி குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், குஜராத்துக்கு கூடுதலாக 15 ரன்கள் கொடுத்துவிட்டோம் என்றும், திட்டமிட்டு செயல்பட்டபோதும் ஃபீல்டிங்கில் சொதப்பிவிட்டோம் என்றும் கூறினார். மேலும், குஜராத் அணியின் பேட்டிங் நன்றாக இருந்ததாகவும், வீரர்கள் சிறப்பாக ஆடும்போது நம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

எந்த அணி முதலில் ப்ளே ஆப் செல்லும்

நடப்பு ஐபிஎல் தொடரில் 59 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 11 போட்டிகளே உள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின்படி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 11 போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. அடுத்த இடத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

அதற்கு அடுத்ததாக சென்னை, டெல்லி, லக்னோ, பெங்களூர் அணி வரையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் முனைப்பில் உள்ளனர். இதனால் சென்னை அணி அடுத்ததாக பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணி மற்றும் பிளே ஆஃப் செல்ல துடிக்கும் பெங்களூர் அணி ஆகிய அணிகளை அதிகபட்ச ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்