சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 220 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். கடந்த 3 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடக்க வீரர்கள் கொடுக்கவில்லை. ஆனால் இன்றை போட்டியில் ருதுராஜ் மற்றும் டு பிளெசிஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இதற்கிடையில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் ருதுராஜ் 64 ரன் இருக்கும்போது கம்மின்ஸிடம் கேட்சை கொடுத்தார். பின்னர், மொயீன் அலி களமிறங்கினார். வழக்கம்போல மொயீன் அலி வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 ரன்னில் வெளியேறினார்.
இன்றைய போட்டியில் திடீர் திருப்பமாக 3 -வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கினார். தோனி தனது பங்கிற்கு 17 ரன்கள் அடித்தார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய டு பிளெசிஸ் 95* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்துள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…