ருதுராஜ், கான்வே சிக்ஸர் மழை… சென்னை அணி 223 ரன்கள் குவிப்பு.!

Conway Rutu fiftyIPL

ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs CSK போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 223/3 ரன்கள் குவிப்பு.

ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளேஆப் சுற்றுக்கு நுழைவதற்கு 6 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் 7 சிக்ஸர் மற்றும் 3 போர்களுடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பேட் செய்ய வந்த டுபே தனது அதிரடியால் சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார், அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து கான்வே 87 ரன்கள்(11 போர்கள், 3 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய தோனி- ஜடேஜா ஜோடி அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்களில் 223/3 ரன்கள் குவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்