சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணியும் மோதியது. ப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா களமிறங்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இவரைதொர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சாஹா 44 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் ஹேசில்வுட் 3, டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்க வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என மொத்தம் 45 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய மொயீன் அலி 17 ரன்னில் ரஷித் கான் ஓவரில் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் தோனி 14*, அம்பதி ராயுடு 17* ரன்கள் எடுத்து இருந்தனர். புள்ளி பட்டியலில் சென்னை 18 புள்ளிகள் பெற்று முதலித்தில் உள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…