ஐசிசியின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்பின் நேற்று, இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா vs இலங்கை, பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை செய்தது. இதில், 6 விக்கெட் விதியத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணி வென்றது. இந்த நிலையில், இரண்டாவது (4வது லீக்) போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது.
டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரரில் ஒருவரான கேப்டன் தேம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால், மறுபக்கம் நட்சித்திர வீரர் குயின்டன் டி காக் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் ( 3 சிக்ஸ், 12 பவுண்டரி) சதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ராஸ்ஸி வான் டெர் டுசென் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அவருடன் களத்தில் இருந்த ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே, வான் டெர் டுசெனும் சிறப்பாக விளையாடி தனது சத்தை பூர்த்தி செய்து, 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த ஹென்ரிச் கிளாசென் 32, டேவிட் மில்லர் 39 ரன்கள் எடுத்தனர்.
எனவே, தென்னாபிரிக்காவில் குயின்டன் டி காக், வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிய மூவரும் அதிரடியான சதம் விளாசி இலங்கைக்கு ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்தனர். இறுதியாக 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை குவித்துள்ளது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த 429 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
இதனிடையே, 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா. கடைசியாக 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடித்திருந்த 417 ரன்களே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …