ஒரு பிட் காயினை பயன்படுத்தி இந்தியாவுக்கு ரூ.41 லட்சம் நிதியுதவி – பிரட் லீ அறிவிப்பு
இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி.
இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இந்த நிலையில், பிஎம்கேர்ஸ் நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்) பேட் கம்மின்ஸ் நிதி கொடுத்திருந்தார்.
இந்த நிதியை கொண்டு இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கம்மிங்க்ஸை தொடர்ந்து, இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ சுமார் ரூ.41 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவை இரண்டாவது தாய் நாடாக கருதுவதாகவும், நிதி உதவி அளித்த பேட் கம்மிங்ஸ்க்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக க்ரிப்டோ கரன்சி, அதாவது, ஒரு பிட் காயினை விடுவித்து, இந்தியாவுக்கு மருத்துவ தேவையான ஆக்சிஜன் வாங்க ரூ.41 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 1 பிட்காயின் மதிப்பு சுமார் 40,95,991 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Well done @patcummins30 ???????? pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021