முழுமையாக ஐபிஎல் போட்டி நடத்த முடியாமல் போனால் ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் வீரர்கள் மட்டும் விளையாடி வந்தனர். இதற்கிடையில், 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியது ” நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மீதம் 31 போட்டிகள் நடைபெற இருந்தது. இந்த போட்டிகள் முழுமையாக நடக்காவிட்டால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது வெறும் தொடக்க மதிப்பீடுதான்.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமென்றால் அதற்குரிய கால இடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உடன் கலந்து ஆலோசனை நடந்த வேண்டும், எனவே இதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம்” என்று கூறியுள்ளார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…