ஐபிஎல் தொடரில் 33 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி துபாயில் நடைபெறவுள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் பெங்களூர் அணி, தொடக்கத்தில் சொதப்பினாலும் அடுத்த நடந்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 9 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. எஞ்சிய மூன்று போட்டிகள் சமனில் முடிந்தது. மேலும், இரு அணிகளும் தங்களின் ஆடும் XI-ல் மாற்றம் செய்ய வாய்ப்புகள் கம்மி. பெரும்பாலும் அதே வீரர்களை வைத்து விளையாடுவார்கள்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…