இன்றைய தினத்தின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு.
ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் விளையாடிய மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் இந்த போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதுவும், இன்று மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பிறந்த நாள் என்பதால், அணிக்கு முதல் வெற்றியை வாங்கி தருவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் சிறப்பாக விளையாடி வாரும் ராஜஸ்தான் ராயல் 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மும்பபைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் என்பதால், அவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். மேலும், நடப்பு தொடரில் ஆரஞ்சு கேப் ஜோஸ் பட்லரும், பர்பிள் கேப் யுஸ்வேந்திர சாஹல் என இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களே தக்க வைத்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் XI): இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் XI): ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…