கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Vaibhav Suryavanshi

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷி குஜராத் பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்டு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 210 என்ற பெரிய இலக்கை துரத்த களமிறங்கிய ராஜஸ்தான் அணியை 14 வயது சிறுவன்  வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் என்று சொல்லலாம்.

போட்டியில் 11 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி என 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அரை சதம் மற்றும் சதம் விளாசியவர் என்ற சாதனையை படைத்தார். இவருடைய அதிரடி ஆட்டம் பார்த்து எதிரணி கூட யாருடா இந்த பையன் என்பது போல பார்த்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதல் போட்டியில் அரை சதம் விளாசமுடியாமல் கண்ணீருடன் சென்ற வைபவ் சூர்யவன்ஷி இந்த முறை சதம் விளாசி அசத்தியுள்ளார். அதே சமயம், ஐபிஎல் சதம் அடித்த வேகமான இந்திய வீரர் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார். இவருடைய அதிரடி ஆட்டத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்