#CSKvRR: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
விளையாடும் வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, சாம் கரண், எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவாதியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சக்காரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்.