இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 30 ரன்கள் அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 23 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய படிக்கல் 31 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்தநிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஜெய்ஸ்வால், அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஹெட்மேயர் சிறப்பாக ஆடி 16 பந்துகளுக்கு 31 ரன்கள் குவிக்க, 19.4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…