#IPL2022: விடாமல் போராடிய ஸ்டாய்னிஸ்.. வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் 20-ம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதிய நிலையில், இதில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள்.
இதில் முதல் பந்திலே கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய கிருஷ்ணப்ப கவுதமும் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 8 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்துகொண்டே இருந்தது. கடைசியாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் களத்தில் இருக்க, 19-வது ஓவரில் அடித்து விளாசினார். ஆனால் இறுதி ஓவரில் குலதீப்-பின் பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. இறுதியாக ராஜஸ்தான் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.