RR VS RCB: முதல் வெற்றி பெறாத அணிகளின் போட்டி… முதல் புள்ளியை பெறப்போவது யார்.?
- இன்னும் புள்ளி கணக்கை துவக்காத இரு அணிகளுக்கான போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது. இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மூன்றையுமே தோற்று தங்களது பள்ளி கணக்கை தொடங்க வில்லை.
இரு அணிகளும் பல தவறுகளை செய்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் மைதானம் ஜெய்பூரில் நடக்க உள்ளது.
பெங்களூர் அணியை பொறுத்தவரை கோலியின் தலைமைப் பண்பு சற்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிரடியாக அவர் ஏதும் மாற்றங்கள் செய்யவில்லை என்றாலும் டாஸ் வென்ற பின்னர் தேர்வு செய்யும் இடம் மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் இடம் ஆகியவற்றில் அவர் தவறு செய்கிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது .
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் சற்று வியப்பாகவே உள்ளது. துவக்க வீரராக அஜின்கியா ரஹானே விற்கு பதில் ஜோஸ் பட்லர் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் என்று புள்ளி கணக்கை துவக்கப் போகிறார்கள் என்று.