#RRvPBKS: வெற்றிநடைப்போடப்போவது யார்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதன் பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்த ஒரு பார்வை.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பையில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. அதேபோல பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் நன்றாக ஆடிவந்த நிலையில், பின்னர் சொதப்ப தொடங்கியது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் இல்லாதால், அவர் இடத்தை கிறிஸ் மோரிஸ் ஆக்கிரமிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல பஞ்சாப் அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பக்க பலமாக உள்ளது. டாப் ஆடரை பொறுத்தளவில் ராகுல், மயங்க் அகர்வால், கெயில் பலம் பலம் சேர்த்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் நிகோலஸ் பூரன் கூடுதலாக பலம் சேர்க்கிறார். இதனால் இன்றைய போட்டியில் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவாதியா, கிறிஸ் மோரிஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி.
பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025