RR vs PBKS IPL 2021:பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்;எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Default Image

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR vs PBKS) ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால், பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிபிகேஎஸ் அணிகளுக்கு எதிரான 4 போட்டிகளில் ராயல்ஸ் தோல்வியடைந்தது.

மறுபுறம், கேஎல் ராகுலின் பிபிகேஎஸ், டெல்லி அணியை இந்த சீசனில் இரண்டு முறை வீழ்த்தியது.இந்த சீசனில் பஞ்சாப் விளையாடிய எட்டு போட்டிகளில்,மூன்றில் வென்று 5 ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.இதனால்,துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ள சுவாரஸ்யமான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கணிக்கப்பட்ட ஆர்ஆர் 11 அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால்/மனன் வோஹ்ரா, டேவிட் மில்லர், சிவம் துபே, ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஜுர் ரஹ்மான்/தப்ரைஸ் ஷம்சி, சேத்தன் சகரியா.

கணிக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 11 அணி: கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்