RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் லக்னோ டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 66 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல், ஆயுஷ் பதோனியும் 50 ரன்கள் குவிக்க, லக்னோ அணியின் ஸ்கொர் 150 ரன்களை தாண்டியது. ஆனால், நிக்கோலஸ் பூரன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
குறிப்பாக, படோனி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார். மார்க்ராம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில், ஹசரங்கா தனது நான்கு ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியில் அப்துல் சமத் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் மொத்தம் நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.
இதன் மூலம், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்பொது, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.