RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

RRvKKR

கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 6வது போட்டி இன்று குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 152 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி சார்பாக, தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 11 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், வைபவ் அரோராவால் கிளீன் பவுல்டு ஆனார். பின்னர், வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் ரியான் பராக் 25 ரன்களுக்கு டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து மொயீன் அலியின் பந்தில் ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும், ஹஸ்ரங்கா 4 ரன்கள், நிதிஷ் ராணா 8 ரன்கள் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் 7என்கிற ஒற்றை இலக்க எண்கள் எடுத்து அவுட்டாகினர்.

இவர்களை தவிர, துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பராக்(25) உள்ளிட்ட வீரர்கள் ரன்கள் எடுக்கவே திணறினர். அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார், ஜோஃப்ரா ஆர்ச்சரின் (7 பந்துகளில் 16) மொத்த ரன்கள் 150 ஐ தாண்டியது. கொல்கத்தா அணி தரப்பில், வருண் சக்ரவர்த்தி, மொயின் அலி, வைபவ் அரோரா, ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இப்பொது, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்