RR vs CSK: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்..! பந்துவீச்சில் பறக்கவிடுமா சென்னை.?

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, சென்னை அணியின் வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி, இதுவரை நடந்த 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியைக்கண்ட ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற முழு முனைப்போடு போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்

Published by
செந்தில்குமார்

Recent Posts

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

35 minutes ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

53 minutes ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

4 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago