ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும் நோக்குடன் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் – மந்தீப் சிங் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் மன்தீப் டக் அவுட் ஆக, அதன்பின் ராகுலுடன் கிறிஸ் கேயில் இணைந்தார்.
இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர, நிதானமான ஆடிவந்த கே.எல்.ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைதொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரண் 22 ரன்கள் அடிக்க, யுனிவர்சல் பாஸ், இன்றைய போட்டியில் 8 சிக்ஸர் அடித்து தனது 1000 சிக்ஸரை நிறைவு தார்.
இறுதியாக கேயில், 99 ரன்கள் அடித்து வெளியேற, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்றஇலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…