மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு., சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஆர்சிபி.!
இன்ஸ்டாலிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட ஐபிஎல் அணி என்ற சிஎஸ்கே-ன் சாதனையை பின்னுக்கு தள்ளி ஆர்சிபி அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வென்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளது.
அட ஆமாங்க.., இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதன் மூலம், இந்திய பிரீமியர் லீக் (IPL) அணிகளில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட அணியாக RCB முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனை ஒருபக்கம், ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அன்பை பொலிந்து வந்தனர். ஆனா, மறுபக்கம் இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் RCB மற்றும் CSK ஆகிய இரு அணிகளும் மிகவும் பிரபலமான மற்றும் வலுவான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. CSK, இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருந்தது. 2024-ல் 16 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருந்தது. RCB-யின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்கள் எண்ணிக்கை 2024-ல் 15 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.