#IPL2020 : மிஸ்டர் 360 அதிரடி ! பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Default Image

ராஜஸ்தான் அணியுடனான  போட்டியில் பெங்களூர்  அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இன்று நடைபெற்ற 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 57 ரன்கள், உத்தப்பா 41 ரன்கள் அடித்தார்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில்மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்கியது.

பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல் , பின்ச்  இருவரும் களமிறங்கினார்கள்.ஆனால் பின்ச் 14  ரன்களில் வெளியேறினார்.ஓரளவு தாக்குபிடித்த  படிக்கல் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக பெங்களூர்  அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய வில்லியர்ஸ்  55 * ரன்கள் அடித்தார்.களத்தில் குர்கீரத்சிங் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் தியாகி , கோபால் , திவாட்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இதனால், பெங்களூர் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான்  அணி 6 புள்ளிகளுடன் அணி 7-வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்