#RCBvKKR: பந்துவீச்சில் திணறிய கொல்கத்தா.. 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி “ஹாட்ரிக்” வெற்றி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 10-ம் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது, கோலி தலைமையிலான பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்தது.
205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிதீஷ் ராணா-சுப்மன் கில் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் சிறப்பாக ஆடிவந்த கில் 29 ரன்களில் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 25 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். நிதானமாக ஆடிவந்த நிதிஷ் ராணா 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதனைதொடர்ந்து கேப்டன் மோர்கன் 29 ரன்களுடனும், ரஸல் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதியாக கொல்கத்தா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்களும், கைல் ஜேமீசன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின்மூலம் பெங்களூர் அணி, தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
February 7, 2025![VidaaMuyarchi box office](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/VidaaMuyarchi-box-office-.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)