இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றது.இப்போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் :
சாம் கரண், ஃபாப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன் /விக்கெட் கீப்பர்), ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மோனு குமார் ,மிட்சல் சான்டனர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணியில் மோனு குமார் , மிட்சல் சான்டனர் ஆகிய இருவரும் ஜோஷ் ஹேசல்வுட் ,தாகூர் ஆகியோருக்கு பதிலாக இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் அணி வீரர்கள் விவரம் :
படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், முகமது சிராஜ், மொயீன் அலி , சைனி, சாஹல் ஆகியோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணியில் உடனாவிற்கு பதிலாக மொயீன் அலி இடம்பெற்றுள்ளார்.
பெங்களுர் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும்,7 போட்டிகளில் வெற்றியும் பெற்று 14 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ளது. சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.ஏற்கனவே இந்த நடைபெற்ற 25-வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…