சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்..!
நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெறுவேன் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், சொந்த மண்ணில் நடக்கும் வங்காள தேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளாக அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி. எனது நாட்டுக்காக விளையாடியதில் எனக்குக் கிடைத்த பெருமை.
இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு தனது முழு கவனம் செலுத்துவதாக டெய்லர் கூறினார். டெய்லர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு தனது டெஸ்டில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் 7,584 டெஸ்ட் ரன்களை எடுத்தார். இதில் அவர் 19 சதங்கள் அடித்தார். 233 ஒருநாள் போட்டிகளில் டெய்லர் 8, 581 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள் அடித்துள்ளார்.
102 டி20 போட்டிகளில் 1909 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் டெய்லர் வெற்றி ரன் அடித்தார்.
Today I’m announcing my retirement from international cricket at the conclusion of the home summer, two more tests against Bangladesh, and six odi’s against Australia & the Netherlands. Thank you for 17 years of incredible support. It’s been an honour to represent my country #234 pic.twitter.com/OTy1rsxkYp
— Ross Taylor (@RossLTaylor) December 29, 2021