தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.மயங்க் அகர்வால் 10,புஜாரா 0 ,கோலி 12 ரன்களில் வெளியேறினார்கள்.இதனை தொடர்ந்து ரகானே மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 6-வது சதம் ஆகும். ரோகித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2000 ரன்களையும் எட்டியுள்ளார் ரோகித். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி தனது 3வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.தற்போது வரை இந்திய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…