உலகக்கோப்பையில் 20 ஆண்டு பிறகு ரோஹித் படைத்த சாதனை..!
நடப்பு உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நெதர்லாந்திற்கு எதிராக இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட் விக்கெட்டை வீழ்த்தி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தனது முதல் சர்வதேச விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டுக்குப் பிறகு விக்கெட்டை வீழ்த்திய ரோஹித்:
கடந்த 2021 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னை டெஸ்டில் ரோஹித் சர்மா பந்து வீசினார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா பந்து வீசி உள்ளார். நேற்று முன்தினம் நெதர்லாந்து அணி ஒன்பது விக்கெட் இழந்த நிலையில் 48-வது ஓவரை ரோஹித் வீசினார். அந்த ஓவரில் நான்காவது பந்தில் தேஜா நிடமனுரு சிக்ஸர் விளாசினார். அதற்கு அடுத்த பந்திலேயே கேப்டன் ரோஹித் வீசிய பந்தை தேஜா நிடமனுரு தூக்கி அடித்தார். ஆனால் முகமது ஷமி லாங்-ஆனில் கேட்சை பிடித்தார்.
இதனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினர். கடைசியாக 2012 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது மெல்போர்னில் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் இதுவரை 9 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 12 விக்கெட்டுகளை ரோஹித் எடுத்த்துள்ளார்.
உலகக்கோப்பையில் விக்கெட் வீழ்த்திய கேப்டன்கள்:
இந்த போட்டியின் மூலம் 20 ஆண்டுகளில் உலகக்கோப்பை போட்டியில் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். கடைசியாக இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி 2003 ஆம் ஆண்டு போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு முன் 1983 மற்றும் 1987 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவ் சாதனை படைத்தார்.