ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு மிகவும் அனுபவம் உண்டு என்பதால் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான தொடரில் கேப்டனை மாற்றம் செய்ய வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் பரவி வருகிறது.

Rohit Sharma CT

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்மில் தான் இருக்கிறது. ஏனென்றால், அவர் பழைய பார்முக்கு  திரும்ப முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக, இந்திய அணிக்காக கடைசி 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் குறைந்தது 20 ரன்களைக் கூட எடுக்கவில்லை தொடர்ச்சியாக 20 ரன்களுக்கு உள்ளேயே ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு முதல் இப்போது வரை (2024- 25)  சீசனில் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் (6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9, 2) மொத்தம் 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  எனவே, அவருடைய பேட்டிங் சரியில்லை என விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இப்படி  விமர்சனங்கள் வந்தபோது தான் ரோஹித் சர்மா ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரின் கடைசி போட்டியில் கூட விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் வழிநடத்தினார். இந்த சுழலில், பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடர் முடிந்த்து இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதிலும் இன்னும் ரோஹித் பார்முக்கு திரும்பவில்லை என்ற காரணத்தால் நடைபெறவிருக்கும் முக்கிய போட்டியான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதில் வேறு வீரரை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bhaskar என்ற இணையதளம் வெளியீட்டு இருக்கும் தகவலின் படி, ரோஹித் சர்மா நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனாக விளையாடாமல் ஒரு வீரராக விளையாடினார் என்றால் நிச்சியமாக அவரில் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை கொடுக்கமுடியும் என்பதற்காக ஹர்திக் பாண்டியவை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மாதிரி முக்கியமான போட்டிகளில் ரோஹித் தான் அணியை வழிநடத்தினால் சரியாக இருக்கும்.

ஏனென்றால், ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு மிகவும் அனுபவம் உண்டு. எனவே, அதனை கருத்தில் கொண்டு கேப்டனை பிசிசிஐ மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவாக தான் இருக்கிறது. ஒரு வேலை 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லத் தவறினால் அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின்  கேப்டனாக ஹர்திக் தான் செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்