கொரோனா வைரஸ்.. ரோஹித் கூறும் அறிவுரைகள்!

Default Image

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அறிவுரைகள் கூறி வரும் நிலையில், ரோகித் சர்மாவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,

உலக மக்கள் அனைவரும் இணைந்து கொரோனவை எதிர்த்தால் மட்டுமே அவற்றிலிருந்து விடுபட முடியும். கொரோனவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என கூறி அவர், கொரோனாவுகான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் குழந்தைகள் பள்ளிக்கூடம் திரையரங்குகள் மற்றும் மால் களுக்கு செல்வதை தவிர்க்க முடியாது எனக் கூறியவர், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறினார். தற்பொழுது இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்