டாஸ் வென்ற ரோஹித் படை பந்து வீச தேர்வு..!
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், ஷார்துல் தாக்கூர், லுங்கி நிகிடி , தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன் ), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா , க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், ராகுல் சாஹர், தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.