ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் இருந்து ரோஹித் விலகல்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. எனவே போட்டியில் விளையாடும் அணைத்து அணி வீரர்களும் தற்போது தீவீர பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். இதற்கிடையில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஐபிஎல் தொடரின் ஒருசில போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் மாதமும், ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபரிலும் நடைபெறவுள்ளதால் ரோஹித் ஷர்மா பணிச்சுமை நிர்வாகத்தை கவனித்து வருகிறார். எனவே, எந்த காயமும் இல்லாமல் இரண்டு போட்டிகளிலும் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமாக உள்ளார்.
இதன் காரணமாகவே, ரோஹித் ஷர்மா ஐபிஎல் தொடரின் ஒருசில போட்டிகளில் இருந்து விலகவுள்ளாராம். மேலும், அவர் அணியில் இல்லாத நிலையில் , சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோஹித் விலகுவதாக பரவும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மும்பை அணி தனது முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த போட்டி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.