உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து உலகக் கோப்பை தொடரில் வெளியேறியது.
இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்திய அணியில் சலசலப்பும் ஏற்பட்டது.இதை தொடர்ந்து கேப்டன் கோலிக்கும் , துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கும் சில வீரர்கள் ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியானது.
உலகக்கோப்பை தொடரின் போது கேப்டன் கோலி , துணை கேப்டன் ரோஹித் சில ஆலோசனைகளை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் கேப்டனாக பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த மூன்று வித போட்டிகளிலும் கோலி கேப்டன் என பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் ரோஹித் இன்ஸ்டாகிராமில் கோலியை அன்ஃபாலோ செய்தார். இந்த செயலை பார்க்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னையின் வெளிப்பாடு என கூறப்படுகிறது.
நேற்று கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவையும் ரோஹித் அன்ஃபாலோ செய்தார்.ஆனால் அனுஷ்கா ஷர்மா ரோஹித் மற்றும் அவர் மனைவியை அன்ஃபாலோ செய்யவில்லை. இந்நிலையில் இன்னும் கோலி ரோஹித்தை பின்தொடர்கிறார்.
இதுபோன்ற செயல்களால் அவர்களுக்குள் பிரச்னை இருப்பதாக தகவல் கிளம்பினார். இந்நிலையில் ரோஹித் அன்ஃபாலோ செய்த பிறகு அனுஷ்கா ஷர்மா தனது ஸ்டேட்டஸில், “பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” என கூறியிருந்தார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் மினி டைடல் பார்க்கை திறந்து…
முவான் : நேற்று (டிசம்பர் 29) காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்டு வந்த ஜேஜூ விமான நிறுவனத்தின் போயிங்…
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…