ரோஹித் – விராட் ஓய்வு? இந்த இருவரில் ஒருவர் தான் அடுத்த இந்திய கேப்டன் !

Published by
பால முருகன்

IndvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகவும், இருவரும் இந்த ஒரு நாள் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கும் நிலையில்,  ஹர்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் இரண்டு பேரில் ஒருவர் அணியை வழிநடத்த வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

kl rahul and hardik pandya [File Image]
மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், இந்திய வீரர்கள் பலரும்  ஐபிஎல் தொடர்  தொடங்கியதிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருப்பதால் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என மூன்று வீரர்களும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எனவே,  பிசிசிஐ அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரோஹித் சர்மா 6 மாதங்கள் ஓய்வு இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago