சச்சின், தோனி, கோலி கூட செய்யாத சாதனை: ரோகித் சர்மா அபாரம்!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 52 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மேலும் இந்த ஆட்டத்தின் போது 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசித் தள்ளினார்,
2 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா ஒரு பெரும் சாதனையைப் படைத்துள்ளார், அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் இவர் அனைத்து விதமான ஆட்டங்களிலும் சேர்த்து 89 சிக்சர்கள் அடித்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக இத்தனை சிக்சர்கள் அடித்து இல்லை.
இதற்கு கிரிஸ் கெய்ல் முன்னதாக 68 சிக்சர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை சச்சின் தோனி விராட் கோலி போன்ற ஒரு கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.