“காலங்கள் பேனாலும் பேசும்”…அன்று ரோஹித் இன்று ஷ்ரேயாஸ்! அணிக்காக செய்த தியாகங்கள்!
ஷ்ரேயாஸ் இப்போது செய்ததை ரோஹித் அப்போதே செய்துவிட்டார் என 2015-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியை குறிப்பிட்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை தியாகம் செய்து அணிக்காக விளையாடியது தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் நினைத்திருந்தால் மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த ஷாஷாங்க் சிங்கிடம் சிங்கிள் எடுத்து தனக்கு ஸ்ட்ரைக் தரும்படி சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் அதனை செய்யாமல் ஷாஷாங்க் சிங்கிடம் நீ என்னுடைய சதத்தை பற்றி யோசிக்காதே நீ உன்னுடைய பாணியில் அதிரடியாக விளையாடு என கூறியுள்ளார். அந்த ஓவரில் முகமது சிராஜை எதிர்கொண்டு விளையாடிய ஷாஷாங்க் சிங் ஒரே ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இதனை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி அந்த டார்கெட்டை எட்ட முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. ஒரு வேளை சதம் அடிக்க ஷாஷாங்க் சிங் சிங்கிள் மட்டும் எடுத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக என்ன நடந்திருக்கும் என சொல்லவே முடியாது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு ரன்கள் தான் முக்கியம் உன்னால் முடிந்த வரை அதிரடியாக விளையாடு என தனது சதம் பற்றிக்கூட கவலைப்படாமல் கூறியுள்ளார். இந்த விஷயத்தை ஷ்ரேயாஸ் ஐயர் செய்தது இப்போது தான். இதற்கு முன்பே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா செய்துவிட்டார் என பாராட்டி வருகிறார்கள்.
இந்த விஷயத்தை மும்பை அணியின் கேப்டனாக இருந்தபோதே ரோஹித் சர்மா செய்திருக்கிறார். எப்போது என்றால் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். அந்த போட்டியில் 98 ரன்கள் எடுத்தும் சதம் வேண்டாம் கடைசி சில பந்துகள் தான் இருக்கிறது முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயற்சி செய்யுங்கள் என மற்றோரு முனையில் இருந்த கோரி ஆண்டர்சனிடம் ரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த போட்டியில் 19-வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கோரி ஆண்டர்சன் சிக்ஸர் விளாசினார். அதற்கு அடுத்த பந்தில் 2 ரன்கள் ஓடிய நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. அதன்பிறகு கோரி ஆண்டர்சன் மூன்றாவது பந்தில் 1 ரன் எடுக்க அவருக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது.
ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி கொண்ட ரோஹித் சர்மா சதம் விளாசிவிடுவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் அதைபோலவே 4-வது பந்தை 93 ரன்களில் இருந்த ரோஹித் பவுண்டரி அடித்தார். இதனால் அவருடைய ரன் 97 ஆக மாறியது மீதம் அந்த ஓவரில் 2 பந்துகள் இருந்த நிலையில் 1 ரன்கள் எடுத்து கோரி ஆண்டர்சனிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். கடைசி பந்தை அவரும் பவுண்டரிக்கு தேரிக்காவிட்டார். இதனால் ரோஹித் சர்மா 98 * ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
அப்போது ரோஹித் நினைத்திருந்தால் கூட 5-வது பந்தில் கோரி ஆண்டர்சனிடம் சிங்கிள் வேண்டாம் என சொல்லிருக்கலாம். ஆனால், ரோஹித் அதனை செய்யாமல் இப்போது ஷ்ரேயாஸ் செய்த அந்த விஷயத்தை அப்போதே ரோஹித் செய்துவிட்டார். இருப்பினும், ரோஹித் அந்த போட்டியில் சதத்தை தவறவிட்டால் கூட 2012-ஆம் ஆண்டே ஐபிஎல்லில் தனது முதல் சத்தத்தை அடித்துவிட்டார். ஆனால், நேற்று ஷ்ரேயாஸ் சதம் விளாசி இருந்தால் அது தான் அவருக்கு முதல் ஐபிஎல் சதமாகவும் இருந்திருக்கும். அதனை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர் அணிக்காக விளையாடியது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.