சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…

சேப்பாக்கத்திற்கு பயிற்சிக்கு சென்ற ரோஹித் ஷர்மா, தோனியின் குட்டி ரசிகர் ஜெர்ஸியில் ஆட்டோகிராப் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Rohit Sharma

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் , சிஎஸ்கே அணியும் மோத உள்ளன. ஐபிஎல் போட்டியில் மும்பையும் சென்னையும் பரம எதிரிகள். இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியை இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போல் ரசிகர்கள் பெரியதாக பார்ப்பது உண்டு.

இந்நிலையில், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயற்சியில் ஈடுபட்ட  ரோஹித் சர்மா, 7வது எண் கொண்ட தோனி ஜெர்சியை அணிந்திருந்து ஒரு சிறிய சிஎஸ்கே ரசிகருக்கு ஆட்டோகிராஃப் போட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரோஹித் சர்மாவின் இந்த எளிமையான செயல், அவரது ரசிகர்களுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. இந்த ஐபிஎல் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும். அதாவது ஐபிஎல்லில் ஷிகர் தவானை விட அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக மாற அவருக்கு வாய்ப்பு உள்ளது.

2008 முதல் 2024 வரை 257 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ரோஹித் 6628 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் ரோஹித் 142 ரன்கள் எடுத்தால், அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக மாறுவார். இந்த சாதனையில் ரோஹித்துக்கு முன்னால் 8004 ரன்கள் எடுத்த சாதனையை படைத்த விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்