ட்விட்டரில் “இந்திய கிரிக்கெட் வீரர்” என்ற பெயரை நீக்கிய ரோஹித் .. ரசிகர்கள் அதிர்ச்சி!

Default Image

ரோஹித் ஷர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் சுய குறிப்பில் எழுதி இருந்தஇந்திய கிரிக்கெட்டர் என்ற வாசகத்தை  நீக்கியுள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை இதனால் பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ரோஹித் சர்மா கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பை அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் சர்மா பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் பலர் ரோஹித் சர்மாவிற்கு காயமா என்ன தான் நடக்கிறது என்று கேள்விகளை எழுப்பினர்.

இந்த நிலையில் ரோஹித் ஷர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் சுய குறிப்பில் எழுதி இருந்தஇந்திய கிரிக்கெட்டர் என்ற வாசகத்தை   நீக்கியுள்ளார்.இதனால் தற்போது பல விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் எழும்பியுள்ளது. ஆனால் ரோகித் ஷர்மா கடந்த ஆகஸ்ட் மாதம்முதலிலிருந்தே தனது ட்விட்டரில் முகப்பு பகுதியில்எந்த மாற்றமும் செய்யவில்லை அவருடைய டுவிட்டர் கவர் போட்டோ கூட இந்திய அணியின் ஜெர்சி அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்