ரோஹித் ஷர்மாவை தொடந்து ஒதுக்கி வரும் கோலி ! இந்திய அணியில் பிளவா!

Default Image

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி , நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் தோல்விடைந்து வெளியேறியது.அதன் பிறகு அணியில் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் கேப்டன் கோலி ரோஹித் ஷர்மாவின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் அதனால் இந்திய அணி இரண்டு குரூப்பாக பிரிந்ததாக கூறப்பட்டது.

Image

மேலும் குறுகிய  ஓவர்  போட்டிகளில்  கேப்டன் கோலி நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நியமிப்பதாக தகவல் வெளியானது.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள அனைத்து போட்டிகளுக்கும் கோலி  கேப்டன்  என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கும் ,ரோஹித் ஷர்மாவிற்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை எனவும் இப்படி சொல்லுபவர்களுக்கு என்ன  லாபம் வரப்போகிறது என்று தெரியவில்லை என கூறினார்.

Image

வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாட உள்ள தொடருக்காக இந்திய அணி மியாமி செல்லும் முன் கோலி  ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை இதனால் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ?அப்போது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை உண்மைதான் என கருத்துக்கள் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை அதனால் மீண்டும் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ? கேட்க தொடக்கி உள்ளனர்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர்  ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார்.அதில் ரோஹித் ஷர்மா,  புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் , ரிஷாப் பந்த் ஆகியோர் இருந்தனர்.ஆனால் அதில் விராட் கோலி இல்லை இதனால் இந்திய அணியில் பிளவு இருப்பது உண்மை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
Suburban trains
TN Driver Conductor
Chidambaram - Gun Shot
trump zelensky phone call
modi bill gates
mk stalin and annamalai