இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர்.
இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் கூட்டணியில் அணியின் ரன்கள் வெகுவாக உயர்ந்தது.இந்நிலையில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அரைசத்தை நிறைவு செய்தனர்.
பின்னர் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய சுழல் பந்தில் ஜேசன் ராய் 66 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு ஜோ ரூட் இறங்கினர்.அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 109 பந்தில் 111 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் 1 ரன்னில் அவுட் ஆனார்.நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.நிதானமாகவும் , சிறப்பாகவும் விளையாடி வந்த கேப்டன் கோலி 76 பந்தில் 66 ரன்கள் அடித்து வெளியேறினர். அடுத்த வீரராக ரிஷாப் பந்த் களமிறங்கினர். ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் நடப்பு உலகக்கோப்பையில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் .
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…