ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

ரோஹித் சர்மா முதல் 9 ஓவர்களில் ஆடுவதை விட்டுவிட்டு 20 -வது ஓவர்களில் விளையாடவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

sunil gavaskar rohit sharma

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வந்த சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டு இருக்கிறது. போட்டியில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டார் என்றால் இன்னுமே அதிகமான பாராட்டுக்கள் கிடைக்கும்.

கேப்டனாக இந்த தொடரில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றாலும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த தொடரின் முதல் போட்டியில் 41 ரன்கள், இரண்டாவது போட்டியில் 20, மூன்றாவது போட்டியில் 15, நான்காவது போட்டியில் 28 ரன்கள் என மொத்தமாக 108 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். எனவே, அவருடைய பேட்டிங் சரியாக இல்லை என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

அதைப்போலவே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்ம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த இரண்டு வருடங்களாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமான ஆட்டங்களை விட்டுவிட்டு கொஞ்சம் பொறுமையாக விளையாடி வருகிறார். ஒரு சில சமயங்களில் பழையபடி விளையாடினாள் கூட ஆரம்பகாலத்தை போல தொடர்ச்சியாக விளையாடவில்லை.

இப்போது அவர் ஆடும் விதம் அவரது திறமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு இல்லை. அதற்காக அவர் சரியான வீரர் இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை அவர் நம்பமுடியாத திறமையான வீரர், விளையாட்டில் வேறு பலரிடம் இல்லாத பலவிதமான ஷாட்களைக் கொண்டவர். அவர் விளையாடும் விதங்கள் பார்க்கும்போது ஆர்வம் அதிகமாக இருக்கும்.

ஆனால், என்னுடைய கருத்து என்னவென்றால், அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடாமல் 20 , 25 ஓவர்கள் இருக்கும்போது இறங்கினால் அவர் நிச்சயமாக அதிகமாக ரன்கள் குவிக்க முடியும் என நினைக்கிறேன். அப்படி இறங்கினால் ஏற்கனவே இறங்கிய வீரர்கள் 200 ரன்கள் அடித்துவிடுவார்கள். அதன்பிறகு ரோஹித் ஷர்மாவும் அதிரடியாக விளையாடினாள் நிச்சயமாக இந்தியா 350 ரன்களை கூட தாண்டும்.

எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அணியில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், ரோஹித் சர்மா 25-30 ரன்கள் எடுப்பதோடு மட்டும் திருப்தி அடையக்கூடாது. அவரும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். வெளியே சென்று ஆக்ரோஷமாக விளையாடுவது ஒரு விஷயம். ஆனால், முக்கியமான போட்டிகளில் கொஞ்சம் பொறுமையாக விளையாடவேண்டும். அடுத்த போட்டியில் அப்படி செய்தால் ரோஹித்தை நினைத்து நான் மகிழ்ச்சி அடைவேன்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai