‘என்ன மனுஷன் ….இது தான் கேப்டன்’! போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கும் ரோஹித் சர்மா ?

Published by
அகில் R

ரோஹித் சர்மா : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தனக்கு கிடைத்த போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு தோல்வியை கூட பெறாமல் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரை இறுதி போட்டிவரை சென்று இங்கிலாந்து அணியுடன் தோல்வியை கண்டனர்.

அதன் பிறகு தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையில் தோல்வியை கண்டாலும், 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றி பெற்றுள்ளது.  மேலும், இந்திய அணி சாம்பியன்ஷிப்பை வென்றவுடன் ஐசிசி, பிசிசிஐ என இந்திய அணிக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகையை வழங்கினார்கள். அதிலும் பிசிசிஐ இந்திய அணிக்கு போனசாக பரிசு தொகையை வழங்கினார்கள்.

அதாவது, பிசிசிஐ வெற்றிக்கு பங்காற்றிய ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் ரூ.125 கோடியை பரிசு தொகையாக வழங்கினார்கள், அதில் விளையாடிய வீரர்களுக்கு ரூ. 5 கோடி, பயிற்சியாளர்களுக்கு ரூ.2.5 கோடி உட்பட ஊழியர்கள் வரை பிரித்துக்கொடுக்கப்பட்டது. அதில், கிரௌண்ட் ஸ்டாஃப் எனப்படும் மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது.

தற்போது, அவர்களுக்கு வழங்கும் அந்த போனஸ் தொகை குறைவாக உள்ளதென கருதி இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவருக்கு கிடைத்துள்ள அந்த போனஸ் தொகையான ரூ.5 கோடியை அந்த ஊழியர்களுக்கு வழங்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இவரது ரசிகர்கள் இணையத்தில் இவரை செயலை பாராட்டி வருவதோடு அவரை கொண்டாடி வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

40 minutes ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

1 hour ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

3 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

4 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

4 hours ago